2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பிரான்ஸ் ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸின் வட, கிழக்கு மாகாணத்தில் அல்சேஸ் பிராந்தியத்தில் ஸ்ட்ரஸ்போர்க் நரகத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 10ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு, காயமடைந்த 34 பேரில் 12 பேர், கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

பரிஸில் தாக்குதல்கள், பிரான்ஸ் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற, இந்த விபத்து, மறுநாள் சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

பொறியியலாளர்களையும் ரயில் வேலைப் பணியாளர்களையும் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த அந்த ரயிலில், 49 பேர் பயணித்துள்ளனர். உயிரிழந்த, காயமடைந்தோரைத் தவிர, 5 பேர் குறித்த விவரங்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

அதிகவேக ரயிலான குறித்த ரயில், தண்டவாளத்தை விட்டு விலகியே விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகமே, இவ்விபத்துக்கான காரணமென அறிவிக்கப்படுகின்றது. எனினும், அதி வேகத்துடன் சென்றமைக்கான காரணம் என்னவென, இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

இடம்பெற்ற இவ்விபத்துத் தொடர்பாக, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள வருவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .