2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பிழையாக கருத்து தெரிவித்த பிரதமர் டேர்ண்புல்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 20 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்புத் துறை கப்பல்களுக்கான வசதிகளை குத்தகைக்கு விடப்படும் பகுதியானது கொண்டிருக்கின்றது என்று டார்வின் துறைமுக நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், டார்வின் துறைமுக வசதிகள் இராணுவத்தால் பயன்ப்படுத்தப்படுவதில்லை என பிரதமர் மல்கொம் டேர்ண்புல் தெரிவித்துள்ளார்.

டார்வின் துறைமுக வசதிகளை சீன நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் வடக்கு பிராந்திய அரசாங்கம், சர்வதேச அளவில் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. இந்த வாரம் பிரதமர் மல்கொம் டேர்ண்புல்லை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்துக் கொண்டபோது, டார்வின் துறைமுக வசதிகள் விற்பனை தொடர்பில் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குத்தகையைப் பெற்றிருந்த லாண்ட்பிரிட்ஜ் எனப்படும் சீன நிறுவனமானது, சீனாவின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறுதியான தொடர்புகளைக் கொண்டிருப்பதாக சில பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்திருந்ததுடன், இந்த நகர்வானது, வடக்கு அவுஸ்திரேலியாவில், சீனாவின் பிரசன்னத்துக்கு வழிவகுக்கும் நடவடிக்கை எனவும் தெரிவித்திருந்தது. எனினும் இந்த குத்தகையை நியாயப்படுத்தியுள்ள பிரதமர் டேர்ண்புல், பாதுகாப்பு திணைக்களத்துடன் இந்தக் குத்தகை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், தேசிய பாதுகாப்புக்கு இதனால் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனினும் குத்தகை தொடர்பாக தவறாகப் பிரதமர் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த தொழிலாளர் கட்சியின் டார்வினின் சொலமன் பகுதிக்கான வேட்பாளர் லூக் கொஸ்லிங், ஹில் வார்வ் துறைமுக வசதிகள் போன்றவை, தனித்து அவுஸ்திரேலிய கடற்படையால் மாத்திரமின்றி, ஏனைய நாடு இராணுவங்களலாலும் பயன்படுத்தப்படுவதாக 99 வருட குத்தகையில் காணப்படுவதாகவும், பிரதமர் வடக்குக்கு வரும்போது தான் எதைப்பற்றி கதைத்தார் என அறிந்து கொள்வது நல்லது எனக் கூறினார்.      

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .