Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 25 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
போஹோ ஹராமின் முக்கியமான முகாமொன்றை நைஜீரிய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி, நேற்று (24), தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ஆயுததாரிகள் குழுவான போஹோ ஹராமின் பலம்வாய்ந்த இடமான சம்பிஸாக் காட்டிலுள்ள இறுதிப் பகுதியிலேயே குறித்த முகாம் அமைந்திருந்தது.
2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், பெல்ஜியம் அளவிலான நிலப்பரப்பைப் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போஹோ ஹராம், நைஜீரியா இராணுவத்தாலும், நைஜீரியாவின் அயல்நாட்டுப் படைகளாலும் பெரும்பாலான பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, தனது தளத்தை சம்பிஸாக்கு மாற்றியிருந்தது.
இந்நிலையில், டிசெம்பர் 23ஆம் திகதி நண்பகல் 1.35 மணிக்கு மேற்குறித்த முகாம் வீழ்ச்சியடைந்ததாகவும், ஆயுததாரிகள் தப்பியுள்ளதாகவும், அவர்கள் ஒளிய இடமில்லை என்றும் இராணுவத் தளபதி கூறியதாக, அறிக்கையொன்றில் ஜனாதிபதி புஹாரி தெரிவித்துள்ளார்.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago