Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலம் வாய்ந்த குழுக்கள் உடனான அதிகரித்து வரும் வன்முறை போததைப்பொருள் யுத்தம் காரணமாக 61,000 பேருக்கு மேல் காணவில்லை என மெக்ஸிக்க அரசாங்கம் நேற்றுத் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், குறித்த காணாமல்போனோரின் எண்ணிக்கையானது மெக்ஸிக்க அரசாங்கம் முன்னர் மதிப்பிட்டதை விட 50 சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 40,000 பேர் காணாமல் போனதாக மெக்ஸிக்க அரசாங்கம் தெரிவித்திருந்தது.
காணாமல்போனோருக்கான உத்தியோகபூர்வ தரவு 61,637 என தேசிய காணாமல்போனோருக்கான பதிவகத்தின் தலைவர் கர்லா குய்ன்டானா செய்தியாளர் மாநாடொன்றில் கூறியுள்ளார்.
இதேவேளை, காணாமல்போனோரில் காற்பகுதியானோர் பெண்கள் என கர்லா குய்ன்டானா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் மோதுவதற்கு இராணுவத்தை 2006ஆம் ஆண்டு அப்போது மெக்ஸிக்க ஜனாதிபதியாக இருந்த பிலிப் கல்டெரோன் அனுப்பியதைத் தொடர்ந்தே 97.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் காணாமல்போயிருந்தனர்.
இதேவேளை, காணாமல்போனோரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் இதுவரை 873 புதைகுழிகளிலிருந்து 1,124 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமது முதல் 13 மாத பணியில் மூன்றிலொரு பங்கு சடலங்களையே அடையாளங்கண்டதாகவும், மொத்தத்தில் நான்கிலொரு பங்குக்கும் குறைவான சடலங்களே உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக மெக்ஸிக்கோவின் தேசிய தேடுதல் ஆணைக்குழு கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago