Editorial / 2019 நவம்பர் 14 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலின் ஆரம்பகட்ட முடிவுகள் இரண்டாவது தடவையாக தாமதப்படுத்தப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.
அந்தவகையில், குறித்த ஒத்திவைப்பானது மேலும் அரசியல் நிச்சயமற்றதன்மைக்கும், மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு செப்டெம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி அஷ்ரப் கானியும், அவரது பிரதான போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவும் போட்டியிட்ட தேர்தலில் மிகக்குறைந்தளவு சதவீதமே வாக்களிப்பு பதிவாகியிருந்தது.
இந்நிலையில், ஆரம்பகட்ட முடிவுகள் கடந்த மாதம் 19ஆம் திகதி அறிவிக்கப்படுவதாக இருந்து, அந்த அறிவிப்பானது வெவ்வேறான தொழில்நுட்பப் பிரச்சினைகளை சுயாதீன தேர்தல் ஆணைக்குழுக்கள் அதிகாரிகள் இனங்காட்டியிருந்த நிலையில் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இச்சந்தர்ப்பத்திலேயே இன்றைய அறிவிப்பும் பின்தள்ளப்பட்டுள்ளது.
தகவல்கள் அல்லது புதிய திகதியொன்றை வழங்காமல், தொழில்நுட்ப மற்றும் ஏனைய பிரச்சினைகள் காரணமாக எதிர்பாராதவிதமாக தேர்தல் முடிவுகளை நாளை (இன்று) அறிவிக்க தங்களால் முடியாது என சுயாதீன தேர்தல் ஆணைக்குழுக்களின் பேச்சாளர் அப்துல் அஸிஸ் இப்ராஹிமி நேற்று தெரிவித்திருந்தார்.
5 hours ago
07 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
07 Jan 2026