Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 23 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலிபான்களின் தலைவர் மன்சூர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், பாகிஸ்தானிய எல்லைப் பகுதிக்குள்ளேயே இடம்பெற்றிருந்த நிலையில், பாகிஸ்தானின் இறையாண்மையை மீறும் செயற்பாடு அதுவென, பாகிஸ்தான் வர்ணித்துள்ளது.
குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட போதிலும், தாக்குதலுக்கு முன்னதாக அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லையென, அமெரிக்க அதிகாரிகள் ஏற்றுக் கொள்கின்றனர்.
இந்நிலையில், இலண்டனில் வைத்துக் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப், 'பாகிஸ்தானின் இறையாண்மையை மீறும் செயற்பாடு இது" எனத் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த இடத்தில் காணப்பட்ட இரண்டு உடல்களில் ஓர் உடல், உள்ளூர் வாகன ஓட்டுநர் ஒருவரின் உடல் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தானின் வெளிநாட்டு அமைச்சு, மிகவும் மோசமாக எரிந்து காணப்படும் உடல், இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
குறித்த இடத்தில், வாலி மொஹமட் என்ற பெயரில் கடவுச்சீட்டொன்று காணப்பட்தோடு, அந்தக் கடவுச்சீட்டில், ஈரானுக்கான விசா காணப்பட்டுள்ளது. அக்கடவுச்சீட்டில் காணப்படும் புகைப்படம், மன்சூரின் பழைய காலப் புகைப்படங்களைப் போன்று காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
அத்தோடு, அங்குள்ள கடவுச்சீட்டின்படி, உயிரிழந்த குறித்த நபர், மார்ச் மாத இறுதியில் ஈரானுக்குச் சென்று, பின்னர் மே 21ஆம் திகதியே பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மன்சூர் என நிரூபிக்கப்பட்டால், ஈரானுக்கும் தலிபான்களுக்குமிடையிலான தொடர்புகள் வெளிப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago