Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 06 , பி.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் தெற்கு நகரமான மெல்பேர்ணில் இடம்பெற்ற சம்பவத்துக்கு, தமது ஆயுததாரிகளில் ஒருவரான துப்பாக்கிதாரியே காரணமென ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோரியமையையடுத்து, குறித்த சம்பவத்தை, பயங்கரவாத நடவடிக்கையாக பொலிஸார் கருதுவதாக, அவுஸ்திரேலியப் பிரதமர் மல்கொம் டேர்ண்புல், இன்று (06) தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்பேர்ணிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நபரொருவரைக் கொன்றதுடன், பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த, நீண்ட குற்ற வரலாற்றைக் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்த துப்பாக்கிதாரி யாகூப் கயரேயை, நேற்று (05) பொலிஸார் சுட்டுக் கொன்றிருந்தனர்.
இந்நிலையில், சிட்னி இராணுவத் தளமொன்றின் மீதான தாக்குதலொன்றுக்கு, 2009ஆம் ஆண்டு, கயரே திட்டமிட்டதாகவும், வன்முறையாக வீடொன்றுக்கு நுழைந்தமையில், நேற்று சம்பவம் இடம்பெறும்போது பரோலில் இருந்ததாகவும், சிரேஷ்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“அண்மையில் பரோலில் விடுவிக்கப்பட்ட நபரான, அறிந்த குற்றவாளியொருவரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் அதிர்சியானதொன்று, கோழைத்தனமான குற்றம்” எனத் தெரிவித்த பிரதமர் டேர்ண்புல், “இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல், இஸ்லாமிய பயங்கரவாதத்தில், தொடர்ச்சியாக நாம் கவனமாக இருக்க வேண்டிய தேவையை இந்தத் தாக்குதல் உணர்த்துகிறது” எனக் கூறியுள்ளார்.
தமது அமக் செய்தி முகவரகத்தின் மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோரிய நிலையில், குறித்த சம்பவத்தை, பயங்கரவாத நடவடிக்கையாக, விசாரணை செய்வதாக, அவுஸ்திரேலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கயரேயை, சோமாலியப் பின்புலத்தைக் கொண்ட அவுஸ்திரேலியர் எனப் பொலிஸார் அடையாளங்கண்டுள்ளனர்.
44 minute ago
56 minute ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
56 minute ago
7 hours ago
19 Sep 2025