Editorial / 2025 நவம்பர் 18 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்கான தேர்தல், செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது.
இதன்போது, கட்சியின் முடிவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை தலைவராக நியமிப்பதை ஆதரித்த சர்வஜனபலய கட்சியின் உறுப்பினர் சந்தன பிரேமநாத் முதுங்கொடுவவின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது.
சர்வஜனபலய கட்சியின் உறுப்பினர் சந்தன பிரேமநாத் தேர்தலின் போது கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்பட்டதாகவும், தேசிய மக்கள் சக்தியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை தவிசாளரா நியமிப்பதை ஆதரித்ததாகவும் தெரியவந்துள்ளது என்று கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன கூறுகிறார்.
கட்சி அறிவித்த முடிவுக்கு மாறாகச் செயல்படுவதும், கட்சியின் அனுமதியின்றிச் செயல்படுவதும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பி.கே. பிரேமரத்ன 23 வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
6 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
33 minute ago
1 hours ago