Editorial / 2017 ஜூலை 17 , பி.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வு, நேற்று (17) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அமர்வின் போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 16 புதிய சட்டமூலங்களைக் கொண்டுவரவுள்ளது.
இந்த மழைக்கால அமர்வின்போது, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில், 34 சட்டமூலங்கள் காணப்படுவதாகவும் அவற்றுள், தாக்கிக் கொலைச் செய்யும் சம்பவங்கள், மாட்டை பாதுகாத்தல் என்ற பேரில் வன்முறை, காஷ்மிர் நிலைவரம், சீன எல்லைப் பிரச்சினை போன்றவை, முக்கிய இடங்களில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும், இந்தச் சட்டமூலங்களுக்குள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமூலம் மற்றும் ஜி.எஸ்.டியின் முன்னேற்றங்கள், ஜம்மு- காஷ்மிர் விவகாரங்கள் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மழைக்கால அமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவிக்கையில், “அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, ஜி.எஸ்.டி மீதான தேசியத்தின் விருப்பம் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் போன்றவை குறித்துக் கலந்துரையாடப்படும் என்று, நம்புகின்றேன்” என்று கூறினார்.
மேலும், “ஜி.எஸ்.டி, வெற்றிகரமாக அமுலுக்கு வந்துள்ளமையால், மழைக்கால அமர்வு, மிகவும் உற்சாகத்துடன் இருக்கும். மழைபெய்யும் போது, மண்ணின் வாசம் வெளியிவருதைப் போன்றே,
ஜி.எஸ்.டி அமுல்படுத்தப்பட்டதையும் ஒரு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அமர்வு, புதிய குடியரசுத் தலைவர் மற்றும் புதிய குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரையும் சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மழைக்கால அமர்வு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago