Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 12 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெக்ஸிக்கோவின் தெற்குப் பகுதியில், 2014ஆம் ஆண்டு செப்டெம்பரில் 43 மாணவர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட அதே இரவில் கடத்தப்பட்ட மற்றொரு மாணவனின் முகத்தை, விலங்குகள் உண்டதாக, மனித உரிமைகள் அமைப்பொன்று அறிவித்துள்ளது.
ஜூலியர் சீசர் மொன்ட்ரகன் என்ற அந்த மாணவனின் உடல், இகுவாலா நகரிலுள்ள குப்பை மிகுந்த பாதையில் கண்டெடுக்கப்பட்டதுடன், அவனது முகத்தில் தோல் எதுவுமே காணப்பட்டிருக்கவில்லை.
முன்னர் வெளிவந்த அறிக்கைகளின்படி, ஏனைய 43 மாணவர்களைக் கடத்திய குழுவே, இம்மாணவனையும் கடத்தி, அவனது முகத்திலுள்ள தோலை உரித்து எடுத்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று முன்தினம் திங்கட்கிழமை, அறிக்கையொன்றை வெளியிட்ட தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, அவனது உடலின் பிரேத பரிசோதனைகளினதும் புகைப்படங்களினதும் ஆதாரத்தின் அடிப்படையில், அவனது முகத்தில் கத்தி வைக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, நாய்களாலும் கொறிக்கும் விலங்குகளாலும் (அணில், எலி) கடிக்கப்பட்டமைக்கானதும் காற்பாதங்களின் அடையாளங்களும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளிவந்த பின்னர், ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த தடயவியல் அணியொன்று வெளியிட்ட அறிக்கையின்படி, விலங்குகளால் அவனது உடலில் கடி ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், சில இடங்களில் கூரிய ஆயுதப் பாவனைக்கான ஆதாரங்களும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
03 Jul 2025
03 Jul 2025
03 Jul 2025