2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மொடல் அழகியை கௌரவக் கொலை செய்த சகோதரன் கைது

George   / 2016 ஜூலை 17 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் மொடல் அழகியும் சமூக வலைத்தள பிரபலமான குவான்டின் ப்ளோஜை கொலை செய்த அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாகாணம் முல்தான் எனும் இடத்தில் வசித்து வந்த 26 வயதான மொடல் அழகி, அவரது சகோரனால் வெள்ளிக்கிழமை  கௌரவக் கொலை செய்யப்பட்டார்.

அதனையடுத்து, தப்பிச்சென்ற சகோதரரை தேடி வலைவிரித்த பொலிஸார், சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் வைத்து கைதுசெய்தனர்.

'எனது தங்கைக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் உறங்கும் பொழுது கழுத்தை நெரித்துக் கொன்றேன். சமூக வலைதளங்களில்  அவளது நடவடிக்கைகள்  மூலம் எங்கள் குடும்பத்துக்கு தீராத அவப்பெயரை உண்டாக்கி விட்டாள்.

மேலும் மதகுருவுடன் அவள் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முக்கியமான ஒன்றாகும். நான் அவளைக் கொன்றதே அவளுக்கு தெரியாது. அவளுக்கு மயக்க மருந்தை மாத்திரை வடிவில்  கொடுத்து விட்டு அவள்  உறங்கும் பொழுது கழுத்தை நெறித்துக்  கொன்றேன். என கைதுசெய்யப்பட்ட அவரது சகோதரன் தெரிவித்துள்ளார்.

இந்த கொலையை வசீம், அவனது சகோதரன் முக்கமது அஸ்லம் சஹீனின் தூண்டுதலின் பேரில் செய்ததாக இந்தக் கொலை குறித்து கருத்து தெரிவித்த வசீமின்  தந்தை முஹம்மத் அஷீம் தெரிவித்துள்ளார்.

பௌசியா அஷீம் என்ற இயற்பெயர் கொண்ட குவான்டின் ப்ளோஜ், பாகிஸ்தானில் தொலைக்காட்சித் தொடர்களில்  நடித்து வந்ததுடன் மொடலிங்கிலும் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .