Shanmugan Murugavel / 2016 மார்ச் 11 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுவெளியில் தோன்றிய அல்-ஷபாப்பின் சிரேஷ்ட தளபதியொருவர், தெற்கு சோமாலியாவிலுள்ள பயிற்சி முகாமொன்றின் மீது ஐக்கிய அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதல்களில் தானும் இன்னொரு தலைவரும் கொல்லப்பட்ட தகவல்களை நிராகரித்தார்.
சோமாலியாவின் ஹியிரான் பகுதியில் தம்மால் மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல்களில் 150க்கு மேற்பட்ட அல்ஷபாப் போராளிகள் கொல்லப்பட்டதாக கடந்த திங்கட்கிழமை (07) அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், அல்-ஷபாப்பின் ஹியிரான் ஆளுநர் மொஹமெட் மிரே, அல்-ஷபாப்பின் முன்னாள் ஹியிரான் தலைவர் யூசுஃப் அலி உகஸ் உட்பட அல்-ஷபாப் தளபதிகள் ஐவர் கொல்லப்பட்டதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையிலேயே, தாக்குதல் நடைபெற்ற அதே மாகாணத்தின் புக்கா குவாபே கிராமத்தில் நேற்று தோன்றிய மிரே, மேற்படி தகவல்களை நிராகரித்துள்ளார்.
51 minute ago
2 hours ago
3 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago
22 Nov 2025