2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மும்பை ரயில் குண்டுவெடிப்பு: ஐவருக்கு மரண தண்டனை விதிப்பு

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி மும்பையில் இடம்பெற்ற ரயில் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு, மரண தண்டனை வித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மும்பை விசேட நீதிமன்றமொன்றே இத்தீர்ப்பை வழங்கியது.

பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, எக்தெஷம் சித்துக்கி, நவீட் கான் ஆகிய நால்வருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மஹாராஸ்திராவின் ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றவியல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அடிப்படையில், ரயில்களில் குண்டுகளைப் பொருத்தியமைக்காக இவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக, நீதிபதி யட்டின் ஷின்டே தெரிவித்தார்.

இது தவிர, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஏனைய 7 பேருக்கு, ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2006ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், குறைந்தது 189 பேர் பலியானதோடு, 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .