2021 மே 15, சனிக்கிழமை

மியூனிக் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 22 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே ர்மனியின் மியூனிச் நகரத்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச்சூட்டில், 9 பேர்சு ட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரிய நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறும், வீதிகளை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வடமேற்கு மோஸா மாவட்டத்திலுள்ள மேற்படி விற்பனை நிலையத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் ஆபத்தான நிலைமையில் காணப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர், தனியாகவே செயற்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், தாக்குதலை மேற்கொண்டவரை ஜேர்மனி - ஈரான் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட 18 வயதானவர் எனவும், அவர் மியூனிச்சில் வாழ்ந்துவந்தார் எனவும் அடையாளங்காணப்பட்டுள்ளார். எனினும், இத்தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை அறியக்கிடைக்கவில்லை.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .