Shanmugan Murugavel / 2015 நவம்பர் 22 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மியான்மாரில் உள்ள பச்சை மாணிக்கக்கல் சுரங்கமொன்றுக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ( 21), 70 இறந்த உடல்கள் மீட்கப்பட்டதாகவும், நேற்று (22), 11 இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காஷின் மாநிலத்தின் வடக்கே உள்ள பக்கான் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு, மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். தவிர, அங்கு எத்தனை பேர் வசித்தார்கள் என எவருக்கும் தெரியாதெனவும், தாங்கள் இறந்த உடல்களை மாத்திரமே அங்கு காணுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையிலுள்ள பச்சை மாணிக்கக்கல் சுரங்களிலிருந்து அகற்றப்பட்ட மூலக்கழிவுகள், ஏனைய கழிவுகளினால் ஆன மலையொன்றில் இருந்து, கழிக்கப்பட்ட பச்சை மாணிக்கக்கல்லின் பகுதிகளை தேடிக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
மேற்படி கழிவுகளைக் கொண்ட மலையினை தோண்டுவதற்கு மீட்புப் பணியாளர்கள், மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதால், இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் உயர்ந்த தரமான பச்சை மாணிக்கக் கற்கள் இப்பிராந்தியத்திலே காணப்படுகின்ற நிலையில், வருடாந்தம், பில்லியன் டொலர்கள் அளவில் வருமானம் கிடைக்கின்றது. எனினும், இந்த வருமானம் தனிப்பட்ட நபர்களுக்கும், மியான்மாரின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர்களுடன் தொடர்புகளைக் கொண்ட நிறுவனங்களுக்கே செல்கின்றது.
14 minute ago
47 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
47 minute ago
55 minute ago
1 hours ago