Shanmugan Murugavel / 2017 மே 18 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழு, இதுவரை வெளிப்படுத்தப்படாத வகையில், 18 தடவைகள், ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது என, அதிகாரிகளை மேற்கோள்காட்டி, றொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னர் வெளிப்படுத்தப்பட்டிருக்காத இந்தத் தொடர்பாடல்கள், தற்போது புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்.பி.ஐ), காங்கிரஸ் விசாரணைகளின் ஓர் அங்கமாகக் கருதப்படவுள்ளது என்று அறிவிக்கப்படுகிறது.
இதில் 6 தொடர்புகள், ஐ.அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதுவர் சேர்ஜெய் கிஸ்லியாக்குக்கும் மைக்கல் ஃபிளின் உள்ளிட்ட ட்ரம்ப்பின் ஆலோசகர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் என அறிவிக்கப்படுகிறது.
நவம்பர் 8ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெற்று, ட்ரம்ப் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்ட பின்னர், ஃபிளினுக்கும் கிஸ்லியாக்குக்கும் இடையிலான தொடர்பு அதிகரித்துள்ளது. இதன்போது, ஐ.அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி, ட்ரம்ப்புக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்குமிடையில் பின்வாசல் வழியான தொடர்பை ஏற்படுவது குறித்து, இவர்கள் கலந்துரையாடியுள்ளனர் என, அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதுவரை மீளாய்வு செய்யப்பட்ட விடயங்களின் அடிப்படையில், இந்தக் கலந்துரையாடல்களில், தவறுகள் மேற்கொள்ளப்
-பட்டிருக்கின்றமைக்கான ஆதாரங்கள் வெளிவரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
28 minute ago
29 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
49 minute ago