Shanmugan Murugavel / 2016 மே 19 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸிலிருந்து எகிப்தியத் தலைநகர் கெய்ரோவுக்கு பயணித்துக் கொண்டிருந்த 804 இலக்க விமானமானது 56 பயணிகளுடனும் 10 விமானப்பணியாளர்களுடனும் காணாமல் போயுள்ளதாக எகிப்துஎயார் உறுதிப்படுத்தியுள்ளது.
எகிப்துஎயாரின் தகவலின்படி, பரிஸின் சாள்ஸ் டீ கயுல்லி விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 11 மணிக்கு புறப்பட்டதாகவும் எகிப்திய உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.26க்கு எகிப்திய இராணுவப் படைகளுடன் இணைந்த மீட்பு அணிகளுக்கு காணாமல் போன விமானத்தின் அவசரநிலை பிரிவிலிருந்து ஆபத்து நிலையிலிருப்பதான கோரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை ராடாலிருந்த விமானம் காணாமல் போனதாகத் டுவிட் ஒன்றில் தெரிவித்துள்ள எகிப்துஎயார், அந்நேரத்தில் எயார்பஸ் ஏ320 ரக மேற்படி விமானமானது எகிப்திய வான்பரப்புக்குள் 16 கிலோமீற்றர் நுழைந்திருந்ததாகவும் 37,000 அடி உயரத்திலிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விமானத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று சிறுவர்களுமாக 30 எகிப்தியர்களும் 15 பிரஞ் நாட்டவர்களும் இரண்டு ஈராக்கியர்களும் ஒரு பிரித்தானியர், ஒரு பெல்ஜிய நாட்டவர், ஒரு சூடானியர், ஒரு சாட் நாட்டவர், ஒரு போர்த்துக்கேயர், ஒரு அல்ஜீரிய நாட்டவர், ஒரு கனேடியர், ஒரு சவூதி நாட்டவர், ஒரு குவைத் நாட்டவர் இருந்ததாகவும் விமானப் பணியாளர்களில் மூன்று பேர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்தியதரைக் கடலுக்கு மேலாக பறந்து கொண்டிருக்கும் போதே தரையிலிருந்த ராடாருடன் தொடர்பை இழந்திருக்கலாம் என விமானத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ள நிலையில், காணாமல் போன விமானத்துக்காக எகிப்தும் கிரேக்கமும் கடலில் தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாக எகிப்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், உள்ளூர் எகிப்துஎயார் விமானமொன்று கடத்தப்பட்டு சைப்ரஸில் தரையிறக்கப்பட்டிருந்தது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago