2021 மே 06, வியாழக்கிழமை

றோமுக்குத் திரும்பினார் பாப்பரசர்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கியூபாவுக்கும் அமெரிக்காவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாப்பரசர் பிரான்ஸிஸ், இத்தாலியின் றோமுக்கு, இன்று தினம் திரும்பினார்.

கடந்த 5 நாட்களாக ஐக்கிய அமெரிக்காவில் தங்கியிருந்த பாப்பரசர் பிரான்ஸிஸ், இதயம் நிறைந்ததும் நன்றியுடையதும் நம்பிக்கையுடதுமானதாக இந்தப் பயணம் அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் வொஷிங்டன், நியூ யோர்க், பிலாடெல்பியா ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்ட பாப்பரசர், அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றிய முதலாவது பாப்பரசர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

அமெரிக்கா முழுவதுமான அவரது உரைகளின் போது, ஏழைகளையும் வசதியற்றவர்களையும் சந்தித்த பாப்பரசர், காலநிலை மாற்றம் தொடர்பாகவும் தனது கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

தவிர, தேவாலயத்திலுள்ள சமயத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரணை செய்வதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .