Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனித் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற உச்சி மாநாடொன்றையடுத்து, லிபியாவில் அமைதியான தீர்மானமொன்றுக்கு உலக நாடுகள் முழுமையாக இணங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிவில் யுத்தத்தில் தலையிடுவதில்லை என உலகத் தலைவர் உறுதியளித்ததுடன், ஐக்கிய நாடுகளின் ஆயுதத் தடையைப் பேண எதிர்பார்த்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் தேசிய இணக்க அரசாங்கத்துக்கெதிராக லிபியாவில் பலம் வாய்ந்த ஜெனரல் காலிஃபா ஹஃப்தார் போரிடுகிறார்.
இந்நிலையில், மேற்குறித்த இரண்டு தரப்புகளும் உச்சி மாநாட்டின்போது நேற்று பிரசன்னமாகியிருந்தபோதும் அவர்கள் சந்தித்திருக்கவில்லை.
அந்தவகையில், இரண்டு தரப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஏனைய தரப்புகளால் கலந்துரையாடப்பட்டதாகவும் ஜேர்மனிய சான்செலர் அங்கெலா மேர்கல் தெரிவித்துள்ளார்.
சான்செலர் அங்கெலா மேர்க்கலுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் ஏர்டோவான், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உள்ளிட்டோரும் குறித்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், உச்சி மாநாட்டுக்கு முன்பதாக உச்சி மாநாட்டின் நோக்கமானது நிலைக்காக அடிபடுவதை நிறுத்துவதாகும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், லிபிய யுத்தத்தில் வெளிநாட்டுத் தலையீட்டை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உறுதிபூண்டு ஐக்கிய நாடுகளின் ஆயுதத் தடையை பேண உறுதிபூண்டவர்களுள் ஐரோப்பிய ஒன்றிய, ரஷ்ய, துருக்கியத் தலைவர்கள் காணப்பட்டிருந்தனர்.
இதேவேளை, ஜெனரல் ஹஃப்தாருக்கு விசுவாசமான படைகளால் சில முக்கிய துறைமுகங்களும், பிரதான எண்ணெய்க் குழாயும் லிபியாவில் மூடப்பட்ட அறிக்கைகள் மிகுந்த கவலைதருவதாக உள்ளதாக செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார்.
29 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago