Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஜூன் 08 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானிய நாடாளுமன்றத்தையும், ஈரானின் புரட்சிகரத் தலைவர் றுஹோல்லா கோமெய்னியின் ஸியாரத்தையும் (நினைவிடம்), நேற்று (07) தாக்கிய தற்கொலைக் குண்டுதாரிகளும், துப்பாக்கிதாரிகளும், குறைந்தது 13 பேரைக் கொன்றுள்ள நிலையில், “இந்த வாணவேடிக்கைகள், ஈரானில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவை விரைவில் அகற்றப்படும்” என ஈரானின் உயர் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானிய தேசத்தினதும், அதன் அதிகாரிகளினதும் திடசங்கற்பத்தைப் பாதிக்குமளவுக்கு இந்தத் தாக்குதல்கள் பெரியதல்ல என, அயோத்துல்லா தெரிவித்ததாக, அரச தொலைக்காட்சி கூறியுள்ளது.
இந்நிலையில், ஈரானின் சக்தி வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படைகள், தாக்குதலுக்கு பின்னால், சவூதி அரேபியாவே உள்ளதாகக் குற்றஞ்சாட்டியதோடு, பழிவாங்கவுள்ளதாகக் கூறியுள்ளன.
“ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியும் (டொனால்ட் ட்ரம்ப்), பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் (சவூதி) பிற்போக்குத் தலைவர்களும் சந்தித்த ஒரு வாரத்திலேயே, பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோரியுள்ள நிலையில், மோசமான இந்தத் தாக்குதலில், அவர்கள் பங்கெடுத்துள்ளனர் என்று உறுதிப்படுத்துகின்றனர்” என, புரட்சிகர காவல் படைகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாக்குதலாளிகள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் இணைந்த, ஈரானைச் சேர்ந்தவர்கள் என, ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் பிரதித் தலைவர் றீஸா செய்பொல்லாஹைய் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர்கள் ஐவரை, தாம் கைது செய்ததாக, ஈரானியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago