Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
செய்யாத கொலையொன்றுக்காக 15 வயதாக இருக்கும் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, தற்போது பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அன்சார் இக்பால் என்ற குறித்த நபரும் அவரது நண்பரும், 16 வருடங்களுக்கு முன்னர், அயலவர் ஒருவரின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர். கிரிக்கெட் போட்டியொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றதாக, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
எனினும், அக்கொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லையெனக் குறிப்பிடும் அன்சார், வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.
பாகிஸ்தானின் சட்டத்தின்படி, குற்றம் இடம்பெறும் பொது 18 வயதுக்குக் குறைவானவராக இருப்பின், ஒருவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட முடியாது என்ற போதிலும், அன்சாரினது பிறப்புச் சான்றிதழ்கள் காலந்தாழ்த்தி வழங்கப்பட்டதாகத் தெரிவித்து, அவற்றைப் பரிட்சிப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
அன்சாரின் பழைய பாடசாலைப் பதிவுகளின்படி அப்போது அவருக்கு 14 எனவும் இவ்வருடம் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் அவருக்கு 15 எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பொலிஸாரின் கணிப்பின்படி அவர் இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தார் எனவும் அதை ஏற்றுக் கொள்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே, அவரது தூக்குத் தண்டனைக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், அவரது தூக்குத் தண்டனை குறித்து மனித உரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
அன்சாரின் நண்பர், சிறுவன் என்ற ரீதியில் வழக்கை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago