2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

வளைகுடா நாடுகளின் முரண்பாடு: சாந்தப்படுத்த குவைத், அமெரிக்கா முயற்சி

Editorial   / 2017 ஜூன் 06 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாருக்கும் அதன் அயல் நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டைக் குறைத்து, அமைதியை ஏற்படுத்துவதற்கு, குவைத்தும் ஐக்கிய அமெரிக்காவும் முயன்று வருவதாக, ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது உட்படப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 6 நாடுகள், கட்டாருடனான உறவைத் துண்டித்திருந்தன. இதன் காரணமாக, பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, இவ்விடயத்தில் மத்தியஸ்தப் பணியை மேற்கொள்வதற்கு, குவைத் முயன்று வருகிறது. இதன்படி, இந்த நிலைமை தொடர்பாக, தொலைக்காட்சி அறிவிப்புகளை விடுவிப்பதைத் தவிர்க்குமாறு, கட்டாரின் பேரரசரிடம், குவைத் ஆட்சியாளர்கள் கோரியுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள்,  இந்த விடயத்தை அமைதிப்படுத்த முயல்வதாகத் தெரிவிக்கின்றனர். ஐ.அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளத்தைக் கொண்டுள்ள கட்டார், ஹமாஸ் போன்ற ஆயுதக் குழுக்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கும், பயனுள்ள இடமாக, ஐ.அமெரிக்காவுக்குக் காணப்படுகிறது. எனவே தான், இந்த விடயத்தில், சமாதானத்தை ஏற்படுத்த, ஐ.அமெரிக்கா முயல்கிறது என அறிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .