2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ரயில் மீது தீவிரவாதிகள் இன்று(08) மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ராவல் பிண்டி நோக்கி செல்வதற்காக வந்த ஜபார் எக்பிரஸ் மீது ஷிபி ரயில் நிலையத்தில் வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட அதிகளவானோர் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் ரயில்வே மத்திய அமைச்சர் கவஜா ஷாட் ரபிக் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத குழுக்களும் இதுவரை உரிமை கோராத நிலையில், இம்மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆதிக்கம் காணப்படுவதால் அவர்கள் இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாமென வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த ஒருமாத காலத்தில் பலுசிஸ்தான மாகாணத்தில் இராணுவத்தினர்  மேற்கொண்ட தாக்குதல்களில் 30 இற்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்தாக அண்மையில் பாகிஸ்தான் பாதுகாப்பு பிரிவு தெரிவித்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--