2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மன்மோகன் சிங் ஓகஸ்ட் 17 காஷ்மீருக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை  பார்வையிடுவதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்  அங்கு செல்லவுள்ளார்.

காஷ்மீரிலுள்ள லே பகுதியில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட  திடீர்  வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 200க்கும் அதிகமானோர் பலியானதுடன், 400 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களை நேரில்ச் சென்று பார்வையிடவுள்ள இந்தியப் பிரதமர், அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கவுள்ளார்.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் பலியானவரின்  குடும்பமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாயும் காயமடைந்த ஒருவருக்கு 50,000 ரூபாயும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என்று இந்தியப் பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--