2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஹொண்டுராஸ் தொழிற்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்: 18 பேர் பலி

Kogilavani   / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altமத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பாதணி தொழிற்சாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  18 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஹொண்டுராஸின் வட பிராந்திய நகரான சென் பெட்ரோவில் நேற்று இனந்தெரியாத இருவர்  இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சென் பெட்ரோ மாகாணத்தின்  பொலிஸ் அதிகாரி ஐவன் மெஜியா தெரிவித்துள்ளார்.

இந்தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் பொலிஸார் அவ்விடத்தை அடைந்த போது அங்கு 13 பேர் இறந்துக் கிடந்ததாகவும் மேலும் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின் இறந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்தாக்குதலில் இறந்தவர்கள் 17-24  வயதுக்குட்பட்டவர்கள் என அவ்வதிகாரி கூறியுள்ளார்.

"இத்தாக்குதலின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. விசாரணைகள் நடைபெறுகின்றன. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை" என ஐவன் மெஜியா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .