2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பக்தாத் வெடிப்புச் சம்பவங்களில் 18 பேர் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈராக் தலைநகர் பக்தாத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரு வெடிப்புச் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த வெடிப்புச் சம்பவங்களில் சுமார் 100 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.  

வடக்கு பக்தாத்தின் அயல் பிரதேசமான அல் புனுக் மற்றும் மன்சூர் ஆகிய பகுதிகளிலேயே இந்த வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மன்சூரில் செல்லிடத் தொலைபேசி நிறுவனமொன்றிற்கு முன்னாலேயே வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஆனாலும் மேற்படி நிறுவனத்தை இலக்கு வைத்தா இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரையில் எதுவும் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .