2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

நிவாரண கப்பல் மீது தாக்குதல்; தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன - இஸ்ரேல்

Menaka Mookandi   / 2010 ஜூலை 13 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸா கரையோரப் பகுதியில் நிவாரணக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
 
இஸ்ரேல் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் கவனயீனமே இந்தத் தாக்குதல்களுக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.. இஸ்ரேல், காஸா நிவாரணக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதனால் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
 
நிவாரணக் கப்பல் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு நியமிக்கப்பட்ட குழுவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.
 
இந்தக் கப்பல்கள் தொடர்பில் வேறும் வழிமுறைகளைப் பின்பற்றி இருக்கலாம் எனவும், இராணுவ உயரதிகாரிகள் தூர நோக்கமின்றி செயற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. சர்வதேச கடற்பரப்பில் துருக்கி நிவாரணக் கப்பல் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 9பேர் கொல்லப்பட்டனர்.
 
புலனாய்வுப் பிரிவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் போதியளவு தொடர்பாடல் காணப்படாமையே துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கு பிரதான காரணமெனக்  குறிப்பிடப்படுகிறது. அத்துடன், தீர்மானம் நிறைவேற்றல் மற்றும் புலனாய்வு நடவடிக்கைளில் தொழில்சார் ஒழுக்க விதிகள் பின்பற்றப்படவில்லை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .