2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அவுஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதம் பொதுத் தேர்தல்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி பொதுதேர்தல் நடைபெறவிருப்பதாக அவுஸ்திரேலியாவின்  புதிய பிரதமர் ஜுலியா கில்லர்ட் அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் மிகக் கண்டிப்பான முறையில் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

அவுஸ்திரேலியாவில் துணைப் பிரதமராக பதவி வகித்த ஜுலியா கில்லர்ட் அந்த நாட்டின் முதலாவது பெண்  பிரதமராக கடந்த மாதம் தெரிவுசெய்யப்பட்டார்.

முன்னர் கெவின் ரூட் பிரதமராக பதவி வகித்து வந்திருந்த நிலையில் கட்சியில்  குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, கெவின் ரூட் தனது பதவியை இராஜினமாச் செய்தார்.

இதனையடுத்தே,  ஜுலியா கில்லர்ட் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--