2026 பெப்ரவரி 13, வெள்ளிக்கிழமை

22 ஆம் திகதி சங்கு கூட்டணியின் மாநாடு

Freelancer   / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்துச் செயற்படும் இந்தக் கூட்டணி, தனது எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை விளக்கங்களை முன்வைக்கும் நோக்கில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாட்டில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ந.சிறீகாந்தா மற்றும் சி.வேந்தன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் கூட்டணியின் சார்பில் வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் வெற்றி பெற்ற பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பல தரப்பினர் கலந்துகொள்ளவுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X