2025 ஜூலை 12, சனிக்கிழமை

கொலம்பியாவில் புதிய ஜனாதிபதி பதவியேற்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் அமெரிக்க நாடானா கொலம்பியாவில் புதிய ஜனாதிபதியாக ஜூவான் மனுவல் சாண்டோஸ் பதவியேற்றுள்ளார்.  59 வயதான சாண்டோஸ் கொலம்பியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராவார்.


அயல் நாடுகளான ஈக்குவடோர் மற்றும் வெனிசுலாவுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தனது அரசாங்கத்தின் முன்னுரிமை விடயங்களாக இருக்கும் என கொலம்பிய ஜனாதிபதி சாண்டோஸ் கூறியுள்ளார்.
 

இதற்கு பதிலளித்துள்ள வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ், கொலம்பிய ஜனாபதி ஜூவான் சாண்டோஸை நேருக்கு நேர் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.


அதேவேளை, கொலம்பியாவில் ஆயுதப் போராட்டம் நடத்திவரும் குழுக்களுடன் பேச்சுவார்த்தைக்கு நடத்தத் தயார் எனவும் ஆனால் அக்குழுக்கள் முதலில் வன்முறைகளைக் கைவிட வேண்டும் ஜனாதிபதி சாண்டோஸ் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .