2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சமாதானம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிட வேண்டாமென ஒபாமா வலியுறுத்தல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிட வேண்டாம் என இஸ்ரேல் மற்றும் பலஸ்த்தீன தலைவர்களிடம், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.  

புதிய பேச்சுவார்த்தைக்கான ஆதரவை தெரிவித்த பாராக் ஒபாமா, இவ்வாறானதொரு சந்தர்ப்பம் மீண்டும் ஏற்படாது எனவும் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பலஸ்த்தீன தலைவர் முஹம்மத் அபாஸ் ஆகியோருக்கிடையேயான நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முதல் நாள் பராக் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்ரேலியர்கள் நால்வர்கள் கொல்லப்பட்டதை ஈவிரக்கமற்ற கொலையெனவும் பராக் ஒபாமா கண்டித்துள்ளார்.

இவர்கள் மேற்குக்கரை நகரான ஹெப்ரோன் அருகில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கஸா நிலப்பரப்பைக் கட்டுபாட்டில் வைத்திருக்கும் இஸ்ரேலுடன் சமாதானம் பேசுவதை எதிர்க்கும்  ஹமாஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.


 


You May Also Like

  Comments - 0

  • jameel Friday, 03 September 2010 10:46 AM

    புதிதாய் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் அழிக்கப்படும் வரை மத்திய கிழக்கில் சமாதானம் இல்லை . இன்னொரு வகையில் சொல்வதென்றால், தான் மட்டும் எஜமான்- மற்றவர்கள் யாவரும் அடிமை என்ற எண்ணமும் மடக்கோட்பாடும் கொண்ட இஸ்ரேல் அழிய வேண்டும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .