Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீலும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பில், காஷ்மீரில் இடம்பெற்று வரும் கலவரம், இடதுசாரி தீவிரவாதிகளின் செயல், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இது தொடர்பில் இந்திய ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில்,
"பிரதீபா பட்டீல் அண்மையில் கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணம் தொடர்பிலும் கலந்துரையாடியதுடன், காஷ்மீர் நிலவரம், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் உள்ளிட்ட இடதுசாரி பயங்கரவாதிகளின் செயல்பாடுகள், காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் அடை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்ற வேண்டிய நிவாரணப் பணிகள், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இந்திய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பிலும் இவர்கள் இருவரும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
3 hours ago
3 hours ago
5 hours ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
14 Nov 2025