2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஆப்கானிஸ்தானில் இன்று நேட்டோ படையினர் இருவர் பலி

Kogilavani   / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altதெற்கு ஆப்கானிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நேட்டோ அமைப்பின் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்படி படையினர்  வெடிகுண்டு தாக்குதலால்  கொல்லப்பட்டுள்ளனர் என்று  நேட்டோ தெரிவித்துள்ளது. ஆனால், இது தொடர்பான மேலதிக விபரங்களை அவ்வமைப்பு வெளியிடவில்லை.

கொல்லப்படும் நேட்டோ படையினர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான விபரங்கள் பொதுவாக அவர்களின் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளப்படும் வரை வெளியிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடத்தில் ஆப்கானிஸ்தான் யுத்தத்தினால் கொல்லப்பட்ட வெளிநாட்டுப் படையணியினரின் எண்ணிக்கை 530 ஆக அதிகரித்துள்ளது

இதேவேளை பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பகுதியான குன்னார் பகுதியில் நேற்று சனிக்கிழமை வான் தாக்குதலை  நடத்தியதாக நேட்டோ அறிவித்துள்ளது.

அந்தப்பகுதியில் உள்ள மூத்த அல்கொய்தா இயக்கத்தின் தளபதி அராபிய போராளிகளுக்கான இணைப்பாளராக அப்பகுதியில் செயற்படுகிறார். அவர்கள் ஆப்கான் பிராந்தியத்திற்கு செல்வதற்கான வழியை காண்பிப்பதற்கு அவர் உதவி செய்துக்கொண்டு இருக்கிறார் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்தாக்குதலில் தளபதி கொல்லப்பட்டாரா என்பதை நேட்டோ தெரிவிக்கவில்லை. ஆனால் கட்டிடம் சேதமாக்கப்பட்டுள்ளது என நேட்டோ மேலும் தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--