Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் மகரந்தச் சேர்க்கையை செய்கின்ற பூச்சியினங்கள் குறைந்து வருவதால் மரக்கறிகளின் உற்பத்தி குறைந்து வருகிறது.
இதன் காரணமாக மக்களுக்கு கிடைக்கக் கூடிய சத்துணவு குறைவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பூச்சிகளின் தொகைக்கும் உற்பத்திக்கும் இடையில் தொடர்புள்ளதை இந்திய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இயற்கையாக கிடைக்கக் கூடிய பூச்சிகளின் சேவை இல்லாது போவதால் நாளடைவில் விவசாய உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தலாம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சுமார் 7.5 மில்லியன் தொன் நிறையுடைய மரக்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
55 minute ago
2 hours ago
xlntgson Wednesday, 29 September 2010 08:56 PM
இலங்கையில் சணல் சாக்குகளில் மரக்கறிகளை பொதி செய்தால் மரக்கறி சில கெட்டுப்போய் விடுகிறது என்று பொலிதீன் பைகளை பரிந்துரை செய்து அதை சட்டமாக்கவும் போகின்றனர். மகரந்தம் குறைந்து பூச்சிகள் அருகுவது பொலிதீன் போன்ற இரசாயன பாவனை அதிகரித்தமையினால் அல்ல என்று இலங்கை விவசாய துறை அதிகாரிகள் நினைக்கின்றனர் போலும். பொன் வண்டு எங்கே, வீட்டுக்கு வீட்டுக்கு கூடு கட்டிய சிட்டுக்குருவி எங்கே, தட்டான் என்னும் தும்பி, ட்ரகன் பிளை-dragonfly -எங்கே? நாங்கள் சிறுவர்களாக இருந்த போது தும்பியை வாலில் கட்டி பறக்க விடுவோம்,
Reply : 0 0
xlntgson Saturday, 02 October 2010 09:21 PM
வீடுகளில் மரக்கறி செய்கையை தூண்டுவதாக தெரியவில்லை டெங்கு டெங்கு என்று வீட்டுத்தோட்டங்களில் இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டி விட தூண்டுவதன் மூலம் இந்த நல்ல பழக்கம் இல்லாமல் போகும்! நாங்கள் படிக்கின்ற காலத்தில் 'வீட்டுத்தோட்டமும் தோட்ட வேலையும்' என்று ஒரு பாடம் இருந்தது அதனால் மன நலமும் உடல் நலமும் ஒருங்கே காப்பற்றப்படுவதோடும் பூமிவளம் பேணப்பட்டது ஆதாரம்: மண்புழுவும் நத்தையும் ஓணானும் அரணையும் ஆனால் இந்த காலத்துப் பிள்ளைகள் இவையெல்லாம் கண்டால் ஓடுகின்றன நீர்ப்பாம்பைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
55 minute ago
2 hours ago