Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் பிலிப்பைன்ஸில் பாரிய சூறாவளி வீசியதுடன், கடும் மழையும் பெய்து வருகிறது.
'மெகி' என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி மணிக்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மெகி சூறாவளி காரணமாக ஆயிரக்கணக்கனோர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அங்கு அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸில் கடந்த நான்கு வருடங்களின் பின்னர் வீசிய பாரிய சூறாவளியாக இது கருதப்படுகிறது.
கடந்த 2006ஆம் ஆண்டு மணிக்கு 155 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய புயல்க் காற்றினால் மண்சரிவுகள் ஏற்பட்டு பல கிராமங்கள் புதையுண்டதுடன் சுமார் 1000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago