2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ஹெய்ட்டி கொலரா கட்டுப்பாட்டிற்குள்?

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெய்ட்டியில் பரவிவந்த கொலரா நோய் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அந்நாட்டில் கொலராவினால் 369  பேர் இறந்துள்ளதுடன் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொலாராவின் காரணமான மரணங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கொலரா பீடிக்கப்பட்ட 5 பேர் தலைநகரில் இனங்காணப்பட்டனர். எனினும் அவர்கள் உடனே தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நோயானது ஜனவரி மாதம் ஹெய்ட்டியில் ஏற்பட்ட பூகம்பத்தில் தப்பிய 1.3 மில்லியன் பேருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--