Super User / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈராக்கின் முன்னாள் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான தாரிக் அஸீஸுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மாற்று மத கட்சிகளை அழிக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
74 வயதான தாரிக் அஸீஸ், முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் ஆட்சிக்காலத்தில் பிரதிப் பிரதமராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகித்தார். சதாமின் நெருங்கிய ஆலோசகராகவும் அவர் விளங்கினார். அவர் ஒரு கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி வழக்கில் ஏனைய இரு பிரதிவாதிகளான முன்னாள் உள்துறை அமைச்சர் சதோவுன் ஷாகிர், சதாம் ஹுஸைனின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் அபேத் ஹமோட் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு அரசியல் நோக்கமுடையது எனக் கூறியுள்ள தாரிக் அஸீஸின் சட்டத்தரணி, ஈராக்கிய படைகளினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் குறித்து விக்கி லீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு ஈராக் அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தாரிக் அஸீஸ் 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
xlntgson Thursday, 28 October 2010 09:15 PM
இவரை தூக்கிலிடுவது சிரமமாக இராது, கைகால் விளங்காத நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறாராம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025