Freelancer / 2026 ஜனவரி 16 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.
இதனால் கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் சங்கமித்துள்ளன.
இந்த பிரதேசத்தில் சில மணித்தியாலங்களுக்குள் சுமார் 169 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. (a)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .