2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பிரேஸிலில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரேஸிலில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

ஆளும் தொழிலாளர் கட்சி வேட்பாளர் டில்மா றூஸ்செப், எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோஸ் செராவை விட முன்னணியில் திகழ்வாரென கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்தலில் ஜோஸ் செரா வெற்றி பெற்றால், அவர் பிரேஸில் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாவார்.

பிரேஸிலி;ல் இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தல் முடிவுகள், ஒரு சில மணித்தியாலங்களில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஒக்டோபர் 3ஆம் திகதி நடைபெற்ற முதல்ச்சுற்று ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளாரும் 50 சதவீத வாக்குகளை பெற தவறியதால், இன்று இரண்டாம் சுற்றுத் தேர்தல் நடைபெறுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .