Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 நவம்பர் 08 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று மாலை உரையாற்றும்போது "இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையை மறுசீரமைக்கப்படுவதை நான் எதிர்பார்க்கிறேன்" என பலத்த கரகோஷத்திற்கு பராக் ஒபாமா தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த 5 நாடுகளில் ஏதேனும் ஐ.நா.வின் தீர்மானங்களை வீட்டோ செய்யும் அதிகாரம் கொண்டவை.
இந்தியாவுடன் ஜப்பான், ஜேர்மனி, பிரேஸில் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்த உறுப்பினராகுவதற்கு முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இரு வருடகாலத்திற்கு தற்காலிகமாக அங்கம் வகிப்பதற்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
xlntgson Tuesday, 09 November 2010 09:35 PM
சூடான் பிரிவினை கருத்து:
லிபியாவின் நைஜீரியாவை பிரிக்கவேண்டும் என்பது போல் இருக்கிறது
இந்தியாவின் வீட்டோ:
எல்லா நாடுகளும் ஆதரவு தெரிவித்து சீனா ஆதரவளிக்காவிட்டால் இயலுமா? சீனாவின் வீட்டோ அதிகாரத்தை நேரு தலைமையிலான இந்தியா ஆதரித்தது என்பதை சீனர்கள் மறந்துவிட்டனர்.
வீட்டோ அதிகாரம் பெற பல நாடுகள் போட்டி போடுவதால் அதிகாரம் general assembly பொது சபைக்கு இருந்தால் போதும்! இந்தியா மட்டுமல்ல ஆப்ரிக்காவும் அரபுலீகும் தென். அமெ. நாடுகளும் பலன் பெரும் ஜெர்மனி உலகை வெல்ல முயன்ற கதை தெரிந்ததே அவ்வாறே ஜப்பானும்!
Reply : 0 0
xlntgson Wednesday, 10 November 2010 08:54 PM
என்னுடைய செய்தியை சீனா கண்டுவிட்டதோ தெரியாது, அவர்களும் எதிர்ப்பில்லை என்று கூறிவிட்டார்கள்.
இந்தியாவுக்கு இப்போது எதிர்ப்பில்லை ஆனால் எப்போதும் எதிர்ப்பில்லை என்று கூறிவிடமுடியாது!
ஐந்து பேர் கொண்ட பாதுகாப்பு சபையில் பிரச்சினை இல்லாமல் முடிவெடுக்க முடியவில்லையே, பத்து பேர் கொண்ட பாதுகாப்பு சபையிலா ஏகோபித்த முடிவுகளை எடுக்கப் போகின்றனர்?
சீனாவுக்கு இந்தியாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை குறைக்க உள்வாங்கி அழிக்கும் நமது அரசியல் உத்தியோ தெரியவில்லை எனக்கு, உங்களுக்கு எப்படி தெரிகிறது? பிரேசில்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 minute ago
29 minute ago