2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இன்று மீண்டும் கூடவுள்ள குழு

Freelancer   / 2025 ஜூலை 17 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (17) மீண்டும் கூடவுள்ளது. 

இந்த குழு கடந்த 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதன் முறையாக கூடியது. 

இதன்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த சட்டமூலத்தை திருத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் சில தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இதில் சில விடயங்கள் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களமும் குழு முன்னிலையில் சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன் இணக்கம் தெரிவிக்கப்பட்ட திருத்தங்களுடன் சட்டமூலத்தை மும்மொழியிலும் அச்சிட்டு இன்று (17) குழுவின் அனுமதிக்காக சமர்பிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X