2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

சீனப் பிரதமர் இந்தியா விஜயம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனப் பிரதமர் வென் ஜியாபோ இன்று புதன்கிழமை 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லிக்கு சென்றுள்ளார்.

இவர் இந்தியாவுக்கு அண்மைக் காலத்தில் விஜயம் செய்த முக்கியமான உலகத் தலைவர்கள் வரிசையில் புதியவராவார்.

பரஸ்பர நம்பிக்கையீனத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இரு ஆசிய  நாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவுகளை பலப்படுத்துவதாக இவரது விஜயம் அமையுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி சீனாவாகும். இவற்றுக்கிடையிலான இருபக்க வர்த்தகத்தின் பெறுமதி இந்த நிதியாண்டில் 60 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகுமென கருதப்படுகிறது.

சீனப் பிரதமருடன் இணைந்து 400 சீன வர்த்தகர்களும் இந்தியா சென்றுள்ளனர்.  

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் 1962ஆம் ஆண்டில் சிறிது காலம் எல்லை யுத்தம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • xlntgson Saturday, 18 December 2010 09:21 PM

  கொரியாவில் பிரச்சினை மூண்டும் கடைசி நேரத்தில் இரத்து செய்யாமல் சீனப்பிரதமர் இந்தியாவுக்கு மேற்கின் மூக்கில் கைவைக்கும் ஆச்சரியமாக வந்துவிட்டார்!
  போர் மேகங்கள் கலைகின்றன என்று கொள்ளலாம்.
  ஆசியாவின் நாயகன் நானா நீயா என்று போட்டி போடாமல் இருவரும் ஒற்றுமையாக செயல் படும் பட்சத்தில் அமெ. ஐரோ. கண்டங்களை அவர்களுக்குரிய இடத்தில் வைக்கலாம்.
  ஆபிரிக்க கண்டமும் கூட சிதறாது செயல்படும் என்று எதிர்பார்க்க இடமிருக்கிறது! உலகில் அதிகமான வளங்களை சொற்பத்துக்கு வழங்கும் இந்த இரு கண்டங்களும் இணைந்தால் நரிகளுக்கு இடமேது?

  Reply : 0       0

  xlntgson Sunday, 19 December 2010 09:20 PM

  துறைமுகம் இல்லாத நேபாளமும் கூட சீனாவுக்கு இரயில்பாதை போடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இது சரித்திரகால "சில்க் ரூட்டுக்கு" மாற்று ஏற்பாடாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்கிறது. அது பாகிஸ்தானால் எதிர்க்கப்பட்டாலும் கூட -அவர்கள் விபத்துகள் மிகுந்த காரக்கோரம் ரேஞ்சையே விரும்புவர், அவர்களுக்கு பலன் என்பதனால்- நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் இரும்புப்பாதை போடப்படுமேயானால் இந்திய சீன ஒற்றுமை மிகக் குறைந்த செலவில் ஏற்படும். கடற்கொள்ளைக்காரர்கள் இந்துமகா சமுத்திரத்தில் அதிகரிக்க இடமில்லை!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .