2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

தேனிலவுக்குச் சென்ற அழகுராணி ஹோட்டல் அறையில் கொலை

Kogilavani   / 2011 ஜனவரி 12 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேனிலவை  கொண்டாடுவதற்காக மொரிஷியஸுக்குச் சென்ற  அயர்லாந்து அழகுராணியொருவர் ஹோட்டல் அறையில் வைத்து கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார்.

ஆசிரியையாக பணியாற்றிய மிச்கேலா மிக்அரியாவி என்ற 27 வயதான  பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கால்பந்தாட்ட  அணியொன்றின் முகாமையாளரின் மகள் ஆவார்.

இந்திய சமுத்திர நாடான மொரிஷியஸின் பொலிஸார் இக்கொலை தொடர்பாக நேற்று இரவு மூவரை கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அத்தியட்சகர் யூசுப் சுபுன் இது தொடர்பாக தெரிவிக்கையில், கொலையாளி  ஹோட்டல் அறைக்கதவின் சாவிக் கார்டை பயன்படுத்தி அறையை திறந்து உள்ளே  நுழைந்துள்ளதாக கூறியுள்ளார்.

'அவர்கள் பலவந்தம் எதுவுமின்றி உள்நுழைந்துள்ளனர். திருடுவதற்காக நுழைந்த அந்நபருக்கு அப்பெண் அதிர்ச்சியளித்திருக்கலாம். அதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றோம்' என அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிச்கேலாவின் சடலம் அவரின் கணவர் ஜோனினால் கண்டுபிடிக்கப்பட்டது. கால்பந்தாட்ட வீரரான ஜோன் இரு வாரங்களுக்கு முன் மிக்கேலாவை திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேனிலவுக்குச் சென்ற தனது அழகிய மகள் கொலை செய்யப்பட்டமை குறித்து தந்தை மிக்கே அதிர்ச்சி தெரிவித்துள்ளார். எவரும் கற்பனை செய்ய முடியாத மிக மோசமான அனர்த்தம் இதுவென அவர் கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X