Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 01 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூஸிலாந்து, கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையிலான மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அந்நாட்டு நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.51 மணிக்கு நடைபெற்றது.
பூமியதிர்ச்சி ஏற்பட்ட நேரத்தில் நாடு முழுவதிலும் இரு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது..
மீட்புப் பணியாளர்கள் தமது ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நியூஸிலாந்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 154 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240ஆக அதிகரிக்கலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுத்திட்டத்தில் 6.3ஆக பதிவாகியிருந்தது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago