2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

எகிப்திய பிரதமர் இராஜினமா

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எகிப்திய பிரதமர் அஹமட் ஸபிக் தனது பதவியை இராஜினமாச் செய்துள்ளதாக நாட்டை ஆட்சி செய்கின்ற இராணுவ பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கமொன்றை அமைக்குமாறு முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸாம் சராப்பிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எகிப்தில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின்போது, அந்த நாட்டு ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது பதவியிலிருந்து விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அஹமட் ஸபிக்கை பிரதமராக நியமித்திருந்தார்.

ஹொஸ்னி முபாரக்கிற்கும் அஹமட் ஸபிக்கிற்கும் நெருக்கமான தொடர்புள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கருதுகின்றனர்.

பிரதமர் அஹமட் ஸபிக்கின் இராஜினமாவை ஏற்றுக்கொண்ட இராணுவப் பேரவை, எஸாம் சராப்பிடம் புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--