2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

கனிமொழியின் பிணை மனு விசாரணை: 2 நீதிபதிகள் விலகல்

Super User   / 2011 ஜூன் 17 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு மோசடி தொடர்பாக கைது செய்ப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் கலைஞர் ரி.வி. பணிப்பாளர்களில் ஒருவருமான கனிமொழியின் பிணை மனுவை விசாரிக்கவிருந்த இரு நீதிபதிகள் இவ்விசாரணையிலிருந்து இன்று விலகியுள்ளனர்.

கனிமொழி மற்றும் கலைஞர் ரி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமார் ஆகியோரின் பிணை மனுக்கள் எதிர்வரும்  திங்கட்கிழமை  இந்திய உயர் நீதிமன்றில் விசாரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அவ்விசாரணையிலிருந்து நீதிபதிகள் பி. சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் விலகிக்கொள்வதாக இந்திய பிரதம நீதியரசர் எஸ்.எச். கபாடியாவுக்கு அறிவித்துள்ளனர்.

இதனால் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, பி.எஸ்.சௌஹான் ஆகியோர் முன்னிலையில் இம்மனுக்கள் விசாரிக்கப்படவுள்ளன.

இதேவேளை கனிமொழி, மற்றும் சரத்குமாருக்கு பிணை வழங்கப்படுவதற்கு சி.பி.ஐ. இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .