2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சவூதி அரேபிய பெண்களின் வாகனம் செலுத்தும் போராட்டம்

Super User   / 2011 ஜூன் 18 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபியாவில் பெண்கள் பலர் நேற்று வாகனம் செலுத்தும்  எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கான  தடை அமுலில் உள்ளது. இந்நிலையில் இத்தடையை நீக்கவலியுறுத்தும் முகமாக பெண்கள் பலர் நேற்று வாகனமோட்டினர்.

கடந்தமாதம் 32 வயது கணினி விஞ்ஞானியான பெண்ணொருவர் தான் வாகனம் செலுத்தும் காட்சியை இணையத்தளத்தில் வெளியிட்டதையடுத்து இருவாரகால சிறைத்தண்டனைக்குள்ளானார். பின்னர் அவர் மன்னிப்பு கோரி விடுதலையான போதிலும் மேற்படி தடை குறித்த வாதப்பிரதிவாதங்களுக்கு இச்சம்பவம் வழிவகுத்தது.

அதேவேளை, மேலும்  6 பெண்கள் ரியாத் நகரில் வெற்றுக் காணிகளில் வாகனம் செலுத்த பழகியபோது கைதுசெய்யப்பட்டு சிறிது நேரம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வாகனம் செலுத்துவதற்கான தடையை மீறுவதற்கு பெண்கள் குழுவொன்று பேஸ் புக் மற்றும் ட்விட்டர் இணையத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்தது.

ஆர்ப்பாட்டங்கள் நடத்த அங்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண்கள் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனித்தனியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கப்பட்டனர்.

அதையடுத்து அவர்கள் நேற்று வீதிகளில் வாகனங்களைச் செலுத்தினர். 32 பெண்கள் வானங்களை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
1990 ஆம் ஆண்டின் பின்னர் அங்கு இடம்பெற்ற இத்தகைய பாரிய எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும். 1990 நவம்பர் மாதம் வாகனம் செலுத்தும் பேராட்டத்தில் ஈடுபட்ட 47 பெண்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாஹாஅல் கஹ்டானி எனும் பெண் நேற்று வாகனம் செலுத்திய அனுபவம்  தொடர்பாக டவிட்டர் இணையத்தளத்தின் மூலம் விடுத்த செய்தியில் 'நான் மன்னர் பஹத் வீதியிலும் ஒலாயா வீதியிலும் எனது கணவருடன் காரை செலுத்திச் சென்றேன். இன்று இக்கார் என்னுடையதாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன்' எனத் தெரிவித்துள்ளார்.

'பெண்கள் வாகனம் செலுத்துவது எந்த சட்டத்தினாலோ மதத்தினாலோ தடுக்கப்படவில்லை. அந்த உரிமையை நான் உறுதிப்படுத்த முயன்றேன்' என அவர் ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளார்.

கஹ்டானி சிறை செல்ல வேண்டி ஏற்பட்டால் மகிழ்வுடன் செல்வதற்காக தனது பிரத்தியேக பொருட்கள் சிலவற்றையும் தயார் நிலையில் கொண்டுசென்றதாக அவரின் கணவர் மொஹமட் அல் கஹ்டானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சவூதி அரேபிய பெண் சாரதிகளுக்கு ஆதரவாக நேற்று லெபனானில் பெண்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டம் எதுவும் இல்லை. ஆனால் சவூதி அரேபியாவில் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ளவர்கள் மாத்திரம்தான் அங்கு வாகனம் செலுத்த முடியும். அங்கு சாரதி அனுமதிப்பத்திரம் ஆண்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகிறது. 


  Comments - 0

 • Abu Faheem Thursday, 23 June 2011 01:06 AM

  தற்போது சவுதியில் ஆண்கள் வண்டி ஓட்டும்போது அதில் பெண்கள் உக்கர்ந்திருந்தாலே வாலிபர்கள் பலர் சேட்டை செய்வதும் பின்தொடர்வதும் கிண்டல்பன்னுவதுமாக இருக்கும் நிலையில் பெண்கள் தனியாக வாகனம் ஓட்டும்போது ஏற்படும் குழப்பங்களை எப்படி சொல்வது? அதனாலேயே சவுதி அரசாங்கம் பெண்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வாய்மொழி சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதுபோன்ற சட்டங்கள் இங்கு தேவையே. பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை தடுக்கும்.

  Reply : 0       0

  jaliyuath Sunday, 19 June 2011 06:59 PM

  சவுதில எல்லாம் மூடிய சட்டம் தான். இஸ்லாம் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கும் முரணான காரியங்கள் எத்தனையோ அரங்கேறுகின்ற அரக்கர்கள் உள்ள ஒரு நாடு. வெளிநாட்டவர்களுக்கு எந்த சுதந்திரமும் இல்லாத நாடு.
  ஒருவன் மரணப்படுக்கையில் வைத்தியசாலை சென்றாலும் பணம் கேட்டு சிகிச்சை செய்யாத நாடு

  Reply : 0       0

  nawas mohammed Sunday, 19 June 2011 08:43 PM

  அட சரியா சொன்னிங்க சர்.
  இது எல்லாம் மனித உரிமை இல்லாத நாடு என்று கூட சொல்லலாம்.

  Reply : 0       0

  nadodi Sunday, 19 June 2011 10:11 PM

  அட உங்க நாட்டில மானிட உரிமை உண்டோ?

  Reply : 0       0

  xlntgson 0776994341;0716597735 sms only Tuesday, 21 June 2011 09:43 PM

  பெண்கள் கேட்கும் சுதந்திரம் எல்லாம் கொடுத்தால் ஆண்கள் எதற்கு?
  ஒரு நடிகை செயற்கை முறையில் கருத்தரித்துக் கொண்டு பிள்ளையின் கணவர் யார் என்று தெரிவிக்கத்தேவை இல்லை என்று வாழ்கிறார். அது போல் செயற்கை முறையில் கருத்தரிக்க செயற்கை விந்து செய்ய பெரும் ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது-ஆணும் பெண்ணும் ஒத்துப் போகாவிடில் இது போன்ற செயற்கை உலகமே எதிர்காலத்தில் ஏற்படும். ஆனால் இந்தியாவில் 8 பெண்களுக்கு 10 ஆண்கள் வீதம் இருக்கின்றனராம் அங்கே என்ன நடக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள், ஒருவனுக்கு ஒருத்தி, கொள்கை!

  Reply : 0       0

  Anban Tuesday, 21 June 2011 10:58 PM

  மானிட உரிமை??? அது ஏதும் தீன்பண்டமோ என்று ம..... குடும்பத்தினர் கேட்பார்கள்.

  Reply : 0       0

  asker Tuesday, 21 June 2011 11:34 PM

  விபச்சாரம் குறைந்த நாடு தான் சவுதி ,அங்கேயும் அதிகரிக்கவா போராட்டம்?

  Reply : 0       0

  handy Wednesday, 22 June 2011 08:08 PM

  உலகத்திலே இஸ்லாம் மதத்தை ஒழுங்காக பின்பற்றும் நாடு சவுதி. இந்த மாதிரியான தடைகள் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X