Suganthini Ratnam / 2011 ஜூலை 15 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள எரிமலைக் குமுறல் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமது வதிவிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.
சுலாவெசி என்னும் பகுதியிலுள்ள மௌன்ற் லொக் எரிமலையே நேற்று வியாழக்கிழமையிலிருந்து குமுறத் தொடங்கியுள்ளது. எரிமலைக் குமுறல் காரணமாக சாம்பல், மண், பாறைகள் 1,500 மீற்றர் தூரத்திற்கு வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலைச் சீற்றத்திற்கான அறிகுறிகள் கடந்த மாதத்திலிருந்தே தென்பட்டது. இதனால் சில நாட்களுக்கு முன்பே மக்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லையென அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மௌன்ற் லொக் என்னும் எரிமலையில் கடைசியாக 1991ஆம் ஆண்டு வெடிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
32 minute ago
44 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
44 minute ago
49 minute ago
1 hours ago