Super User / 2011 ஜூலை 15 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிபியாவின் கிளர்ச்சியாளர்களை அந்நாட்டின் அதிகாரபூர்வ ஆளும்தரப்பாக அங்கீகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன்படி வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள லிபிய அரசாங்கத்தின் மில்லியின் கணக்கான டொலர் சொத்துக்கள் மேற்படி சபையிடம் ஒப்படைக்கப்படும்.
எதிர்க்கட்சித் தரப்பினரைக்கொண்ட இடைமாற்ற தேசிய சபையை லிபியாவின் ஆளுந்தரப்பாக அங்கீகரிப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற ராஜதந்திரிகளின் மாநாடொன்றிலேயே ஹிலாரி இதைத் தெரிவித்துள்ளார்.
கேணல் முவம்மர் கடாபிக்கு இனிமேல் லிபியாவில் எந்தவொரு அதிகாரமும் இல்லையென அமெரிக்கா கருதுவதாகவும் அவர்கூறியுள்ளார்.
மேற்குலக மற்றும் அரபுலகைச் சேர்ந்த 30 இற்கும் அதிகமான நாடுகள் லபிய எதிர்த்தரப்பினரை அங்கீகரித்திருப்பதாக ஏனைய சில வெளிநாட்டு அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இத்தீர்மானத்தினால் அதிகாரத்தை கைவிட்டுச் செல்வதைத் தவிர, கடாபிக்கு வேறு தெரிவு இல்லை என இத்தாலிய வெளிவிவகார அமைச்சர் பிராங்கோ பிராட்டினி கூறியுள்ளார்.
42 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago