2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மும்பை வெடிப்புகள்: 'இந்து அமைப்புகள் உட்பட அனைத்து பயங்கரவாத குழுக்கள் தொடர்பாகவும் விசாரணை வேண்டு

Super User   / 2011 ஜூலை 17 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக இந்து அமைப்புகள் உட்பட அனைத்து பயங்கரவாத குழுக்களின் பாத்திரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

இந்து அமைப்பான ராஷ்டிரிய சுயம் சேவாவை (ஆர்.எஸ்.எஸ்.) அவர் 'குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள்' என விமர்சித்துள்ளார்.

"ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டில் பயங்கரவாதத்தை பரப்பி வருகிறது. அது குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளாக விளங்குகிறது" என மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது எனக் கூறி நேற்று சனிக்கிழமை திக்விஜய் சிங் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் இன்று மேலும் விபரிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திக் விஜய் சிங்கின் கூற்றுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, இதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி மன்னிப்பு கோரவேண்டும் எனக் கூறியுள்ளது.
 


  Comments - 0

 • asker Monday, 18 July 2011 04:31 PM

  அவர் சொன்னது உண்மை. கடந்த சில வருண்டங்களாக இந்து தீவிரவாதம் தான் அதிகமாக இருக்கிறது.. இராணுவத் தலைவர்கள் கூட இதில் அடங்குவார்கள் ...........

  Reply : 0       0

  xlntgson Monday, 18 July 2011 09:17 PM

  நானும் நினைத்தேன்!
  முஸ்லிம்கள் நிறைந்த இடங்களில் முஸ்லிம்களை இலக்கு வைத்து முஸ்லிம்களே இந்தப் படு மோசமான செயலைச் செய்வார்களா என்று, இதற்கு முன்பும் இம்மாதிரியாக முஸ்லிம்களை கொன்று குவித்து பின் அந்த குண்டுகள் முஸ்லிம் பயங்கரச் செயல் அல்ல காவி பயங்கரம் என்று வந்தது நீதி மன்ற விசாரணையின் பின்!
  பத்திரிகைகள் இந்தியாவில் உடன் உடன் தீர்ப்பு வழங்குவது தான் வேடிக்கை!
  காவி பயங்கரவாதம் என்று சொன்னார் என்பதற்காகவே சிதம்பரத்தை இலக்கு வைத்து செயல்படுகின்றனர் என்று சமுசயக்க இடம் இருக்கிறது, எதிர்க்கட்சிகளும்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--